சொமாலியாவும் கென்யாவும் இஸ்லாமியவாத ஆயுததாரிகளின் பயங்கரவாதத்துக்கெதிராக ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என சொமாலிய அதிபர் ஹஸ்ஸன் ஷேக் மஹ்மூத் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ மாணவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். கென்யாவின் வடகிழக்கே கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி 140 பேருக்கும் அதிகமானோரைக் கொன்ற சம்பவத்தை அடுத்து சொமாலிய அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அல்ஷபாப் ஆயுததாரிகள் கிறிஸ்தவ மாணவர்களை மட்டும் தனியாக ஒதுக்கி சுட்டுக்கொன்றது காட்டுமிராண்டித்தனம் என்று கூறியுள்ள மஹ்மூத், கென்ய மக்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.இதனிடையே இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவராக சந்தேகிக்கப்படும் கென்யாவில் முன்பு ஆசிரியராக இருந்த முகமது மஹ்மூத் என்பரைப் பிடிக்க உதவுபவருக்கு சன்மானம் வழங்கப்படும் என கென்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர் சொமாலியாவில் பதுங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
No comments
Post a Comment