சிதாத் வெத்தமுனியின் தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் இடைக்கால சபை, முன்னாள் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சேவையினை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடவிருக்கும் முத்தையா முரளீதரனின் நிபுணத்துவம் வாய்ந்த சேவையினை பெறுவதில், விளையாட்டுத்துறை அமைச்சர் நவின் திசநாயக்காவும் ஆவலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களை கைப்பற்றி சாதனை செய்துள்ளதுடன், 350 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டு 534 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் இடைக்கால நிர்வாக சபையின் ஆலோசகராக மஹேல ஜயவர்தனவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons