Latest News

April 05, 2015

எதிர்காலம் நோக்கி செயற்படவும் - முன்னாள் ஜனாதிபதி
by Unknown - 0


இறந்தகாலம் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்வைத்து, காலம் கடத்தாது, தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தை நோக்கி அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னர் இருந்த அரசாங்கத்தினால் முன் எடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பொய் பிரசாரங்களை முன் எடுக்கின்றது.

இதன்காரணமாக, மக்களுக்கிடையே சகல அபிவிருத்தி தொடர்பிலும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஏற்பட வாய்புள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது ஊடக பிரிவு ஊடாக மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாசீம் அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலே அவற்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலப்பகுதியினுள், பெருந்தெருக்கள் செயற்திட்டத்திற்காக உரிய அளவிற்கு மேலதிகமாக அதிக நிதி ஒதுக்கீட்டை செய்து ஊழல் மோசடி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சுமத்தியிருந்தார்.

பெருந்தெருக்களை பொறுத்தவரையில், ஒவ்வொரு செயற்திட்டமும் ஒன்றுக்கொன்று மாறுப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தெரு செயற்திட்டமானது, சீனி, பருப்பு  போன்று நிர்ணய விலைக்குட்பட்ட உற்பத்தி பொருட்கள் அல்லவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காடான பிரதேசம், மேட்;டு நிலம், கருங்கல் பாறை, பாலம், காணிகளை கைப்பற்றி கொள்ளல் போன்ற விடயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளில் கூடுதலான அல்லது குறைந்தளவிலான செலவினங்கள் ஏற்பட வாய்புள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »