Latest News

April 05, 2015

ஹெலிகாப்டர் விபத்து : ஜமாலுடின் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் பலி!
by Unknown - 0


காஜாங் சுங்கை லாலாங் ரப்பர் தோட்டம் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ரொம்பின் நாடாளுமன்ற. உறுப்பினர் டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாட் ஹரிணி உறுதிபடுத்தியுள்ளார்

சம்பவத்தின் போது அந்த ஹெலிகாப்டர் குவாந்தானிலிருந்து சுபாங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அமைச்சர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த ஹெலிகாப்டர் பயணம் செய்தவர்களில் ஒருவர் கெடா மாநில வர்த்தகர் டத்தோ ராபர்ட் தான், டத்தோ ஶ்ரீ அன்பின் அலியாஸ், தேசிய தலைமைச் செயலாளரின் பிரதமர் துறை சிறப்பு அதிகாரி, கேப்டன் மற்றொருவரும் அடங்குவர்.

 போலீசார் தீயணைப்பு  படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்றொரு திருமண விருந்துக்கு செல்லவிருந்தார் ஜமாலுடின்

கோலாலம்பூர், ஏப்ரல் 4- இன்று காலை பகாங், பெக்கானில் நடைபெற்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகளின் திருமண விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் மாலையில் மற்றொரு திருமண விருந்துபசரிப்பில் கலந்துக்கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இன்று மாலை PR1MA கார்ப்பரேஷனின் மூத்த அதிகாரி டத்தோ மூத்தாலிப் அலியாசின் மகள், நுர் அத்திகா அப்துல் முத்தாலிப்பின் திருமண விருந்துபசரிப்பில் கலந்துக்கொள்ளவிருந்தார்.

இதற்காக குவாந்தானிலிருந்து சுபாங் நோக்கி 5 பேருடன்  PR1MA கார்ப்பரேஷனின் தலைமை இயக்குனருமான அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது நிகழ்ந்த விபத்தில் ஜமாலுடின் ஜார்ஜிஸ் மரணமடைந்தார்/

டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் விபத்துக்குள்ளான சம்பவம் சைம் டார்பி மாநாட்டில் நடைபெற்ற திருமண விருந்துபசரிப்பில் சோகத்தை அப்பியிருந்ததாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

விருந்துபசரிப்பில் சற்று தோய் ஏற்பட்டாலும். அது தொடர்ந்து நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.  

« PREV
NEXT »