Latest News

April 05, 2015

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு!
by admin - 0

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள 58வது இராணுவ படைப்பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாயின்   சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிப்பாய் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியை சேர்ந்த எச்.எஸ்.மதுசங்க  என்ற இவ்வாறு சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்தனர்

« PREV
NEXT »

No comments