Latest News

April 05, 2015

வவுனியாவில் வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது!
by Unknown - 0


வவுனியா புளியங்குளம் பகுதியில் வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளா‍கியுள்ளது.

இந்த விபத்து அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக வேன் வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்திற்குள்ளான வேனில் பயணித்த இருவர் படுகாயமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »