Latest News

April 25, 2015

டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!!
by admin - 0

டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.


மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments