Latest News

April 21, 2015

ஆ .... வந்து விட்டாரா? எனக்குத் தெரியாது-பசில் வரவு குறித்து மகிந்த
by admin - 0


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியது தமக்கு தெரியாது என அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கம்பஹாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். 

நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போது ஊடகவியலாளர்கள் பசிலின் இலங்கை வருகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். 

பசில் ராஜபக்ச நாடு திரும்பியது பற்றி உங்களது கருத்து? என ஊடகவியலாளர்கள் வினவினர். 

ஆ .... வந்து விட்டாரா? எனக்குத் தெரியாது. அவர் கம்பஹாவில் தனது அரசியலை செய்தார். நான் எனது அரசியலை செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments