Latest News

April 21, 2015

மகிந்தவை பிரதமராக்க வேண்டும்-கோத்தா
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, சம்பூர்
நாட்டை பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கை கோர்த்துக்கொள்ள வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் அவரது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இருவரும் இணைந்து மீண்டும் செயற்பாட்டு ரீதியான ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்கி நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மீளவும் வர வேண்டுமென மக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர் எனவும், அதனை விடவும் தற்போது மக்கள் ஆதரவு பல்கிப் பெருகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யார் ஆட்சி செய்கின்றார்கள் யார் உண்மையில் நாட்டின் தலைவர் என்பது தொடர்பில் மக்கள் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு புறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச நிர்வாக கடமைகளை ஆற்றி வரும் அதேவேளை, சந்திரிக்கா, சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித போன்றவர்ளும் அரச நிர்வாகத்தை தாங்கள் கட்டுப்படுத்துவதாக அறிவித்து வருகின்றனர் என அ வர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் தொழில்களை இழந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை தாமே வெற்றியீட்டியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறி வருகின்ற போதிலும், 30 ஆண்டுகளாக இராணுத்தில் இருந்த போதும் அவரால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியவில்லை எனவும், ராஜபக்ஸ சகோதரர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னரே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும் கோதபாய ராஜபக்ஸ இந்திய ஊடக மொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments