கல்முனை கடற்கரைப் பிரதேசங்களில் இரவு நேரத்தில் கலாசார சீரழிவுகள் நடைபெறுவதாகவும் அதனைக்கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக கஞ்சா போதைவஸ்து மதுபாவனை, பாலியல் துர்நடத்தைகள் என்பன அதிகரித்துள்ளன. கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை போன்ற கடற்கரைப் பிரதேசங்களில் இரவு நேரத்தில் சிலர் மது அருந்துவதுடன் குடித்து விட்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அயலில் உள்ளவர்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகின்றனர். குடும்பமாய் வசிப்பவர்கள் தாகாத வார்த்தைகளை கேட்பதன் மூலம் தமது பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இரவு 9 மணிக்கு பின்னரே இக் கடற்கரைப் பிரதேசங்களில் மது அருந்துதல் போதைவஸ்து பாவனையில் ஈடுபடல் போன்றவற்றில் சில குழுக்கள் ஈடுபடுகின்றன. இவை தவிர வெளி இடங்களில் இருந்து வரும் ஆண், பெண் இரு பாலாரும் பாலியல் துர்நடத்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பெண்களை அழைத்து வந்து பாலியல் துர்நடத்தையில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையில் கைகலப்புகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரம் பாண்டிருப்பு கடற்கரையில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட இருவர் பிரதேச இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கல்முனைப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்தும் வகையில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பல்வேறு விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனைப் பிரதேசத்தில் நடைபெறும் சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொலிஸார் சிவில் பிரதி நிதிகள் ஆக்க பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments
Post a Comment