ஜே.வி.பியினுள் அரசியல் சூறாவளியை தோற்றுவிக்க சிலர் முயற்சித்து வருவதாக அந்த கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும். சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவங்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகியதை கருத்தில் கொண்டு சில தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டுக்கு எதிரான, ஜே.வி.பிக்கும் எதிரான ஒரு சில சிறிய அரசியல் குழுக்கள் தமது சுயலாபத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது கட்சியினுள் எந்தவித பிளவுகளோ, குழப்பங்களோ, நெருக்கடிளோ இல்லை என குறிப்பிட்டார்.
ஜே.வி.பியை விட்டு விலகிச் செல்வதற்கு யாருக்கும் எண்ணம்.
தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்து கட்சியிலிருந்து விலகிய சோமவங்ச அமரசிங்கவை மீண்டும் கட்சியினுள் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொது செயலாளர் ரில்வில் சில்வா குறிப்பிட்டார்.
இதேவேளை, சோமவங்ச அமரசிங்கவுடன் மேலும் ஒரு குழு கட்சியிலிருந்து விலகப் போவதாக கூறி அவர்களின் பெயர் பட்டியலுடன் ஊடக அறிக்கையை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment