மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 700 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதால், அதில் பயணம் செய்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு சுமார் 500 முதல் 700 வரை எண்ணிக்கை உள்ள அகதிகளை ஏற்றி வந்த கப்பல், இத்தாலி நாட்டை சேர்ந்த Lampedusa என்ற தீவுப்பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது.
இத்தாலிக்கு சொந்தமான Maltese Navy மற்றும் வர்த்தக கப்பல்கள் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 28 அகதிகளே மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
Lampedusa தீவிலிருந்து லிபியா கடல்பகுதிக்குட்பட்ட சுமார் 210 கிலோ மீற்றர் வரை தேடுதல் பணியை முடக்கியுள்ளதாக இத்தாலி நாட்டு கடலோர பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்காண அகதிகள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இதே மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய கப்பலில் பயணித்த 550 அகதிகளில் 400 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
1 comment
என்ன கொடுமை...அனுதாபங்கள்
Post a Comment