மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து தான் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவங்ச அமரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
பத்தரமுள்ளயில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை மக்கள் விடுதலை முன்னணி உரிய முறையில் பயன்படுத்துவதில்லையெனவும், ஜே.வி.பி. யின் கொள்கையில் நடைமுறைக்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியில் பலருக்கு அநீதமிழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத்தும் சமூகமளித்திருந்ததாகவும், இருப்பினும் அவருக்கு மேடையில் ஏற வேண்டாம் என சோமவங்ச தெரிவித்ததாகவும், விரும்பினால் முன்னாள் உள்ள கதிரைகளில் அமர்ந்து கொள்ளலாம் எனக் கூறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்த பின்னர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்:
இது சோமவங்ச சகோதரரின் தனிப்பட்ட தீர்மானம். நாம் அவரை கட்சியுடன் சேர்ந்து செயற்படுமாறு தொடர்ந்து வேண்கோள் விடுக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment