Latest News

April 16, 2015

மார­டைப்­புக்­குள்­ளாகி இறந்த நபரை பனிக்­கட்டி நீரில் குளிக்க வைத்து உயிர்ப்­பித்த மருத்­து­வர்கள்
by admin - 0

மார­டைப்­புக்­குள்­ளாகி இறந்த நபரை பனிக்­கட்டி நீரில் குளிக்க வைத்து உயிர்ப்­பித்த மருத்­து­வர்கள்
மார­டைப்­புக்­குள்­ளாகி இரு­தய இயக்கம் ஸ்தம்­பி­த­ம­டைந்து இறந்த நப­ரொ­ரு­வரை மருத்­து­வர்கள் பனிக்­கட்­டி­களைக் கொண்ட குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து அவ­ரது இரு­த­யத்தை இயங்கச் செய்து அவரை மீள உயிர் பெற்று எழச் செய்த சம்­பவம் துருக்­கியில் அங்­காரா நகரில் இடம்­பெற்­றுள்­ளது.
புளன்ட் சன்மெஸ் என்ற மேற்­படி நபர் மார­டைப்­புக்­குள்­ளாகி மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிறிது நேரத்தில் அவ­ரது இரு­தய இயக்கம் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது.

இந்­நி­லையில் மருத்­து­வர்கள் அவ­ரது உடல் பாகங்­க­ளுக்­கான ஒட்­சிசன் விநி­யோ­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய பற்­றாக்­கு­றையால் தோன்றும் பாதிப்­பு­களை வரை­யறை செய்ய அவ­ரது உடல் வெப்­ப­நி­லையை குறைப்­ப­தற்­கான சர்ச்­சைக்­கு­ரிய பனிக்­கட்டி நீர் குளியல் சிகிச்­சையை அவ­ருக்கு வழங்­கினர்.
தொடர்ந்து புளன்ட்டின் இரு­தயம் இயங்க ஆரம்­பித்­ததும் அவ­ரது உடல் வெப்­ப­நி­லையை வழ­மைக்கு கொண்டு வரு­வ­தற்கு மருத்­து­வர்கள் சுமார் 24 மணி நேரம் போராட நேர்ந்­தது.

இறந்து விட்­ட­தாக கரு­தப்­பட்ட இரு பிள்­ளை­களின் தந்­தை­யான புளன்ட் (40 வயது) மீள உயிர் பெற்று எழுந்­துள்­ளது குறித்து மருத்­து­வர்கள் அறி­வித்ததும் அவ­ரது குடும்­பத்­தினர் இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ள னர்.

எனினும் உயிர் மீண்டு எழுந்த புளன்ட்­டிற்கு மார­டைப்பின் போது ஏற்­பட்ட கடும் மூளைச் சிதைவால் அவ­ரது கடந்த கால வாழ்க்­கையின் அரைப் பகுதி மட்­டுமே ஞாப­கத்­தி­லுள்­ள­தா­கவும் ஏனைய சம்­ப­வங்­களை நினை­வு­கூர முடி­யாத நிலையில் அவர் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
« PREV
NEXT »

No comments