யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு வருவதுடன் நாளை வழமைபோல கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சகமாணவர்களை வாள்கள் கொண்டு வெட்டியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக சூழலில் வைத்து யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் கடந்த திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ்.பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் கடந்த மூன்று நாள்களாகவும் வகுப்புப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். எனினும் இன்றுடன் புறக்கணிப்பு முடிவடைவதாகவும் நாளை முதல் கற்றல் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெறும் என்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பல்கலைக்கழக சூழலில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் கடந்த 27 ஆம் திகதி யாழ். நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment