Latest News

April 29, 2015

ஜோன் கெரி த.தே.கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார்!
by Unknown - 0

இலங்கை வரவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது.

எதிர்வரும் இரண்டாம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை சந்திப்பதற்கான அனுமதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளது

இதன்படி அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கெரி இலங்கையில் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே தங்கி இருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments