லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நடனத்துக்காக அவர், இந்திய ரூபாவில் 4 கோடியை கேட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அந்த பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண வைபவத்தை மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவத்துக்காக லண்டன் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் அந்த இரண்டு நாட்களுக்குமான தங்குமிட வசதிகள் மற்றும் விமான செலவுகளை அந்த வர்த்தகர் பொறுப்பேற்று கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் அங்கு செல்லுவது தொடர்பில் தனது நாட்காட்டியில் குறித்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment