யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு சுதுமலை சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீடப் மாணவர்கள் 9பேர் நேற்று மானிப்பாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பார்ப்பதற்கு சென்று கொண்டிருந்த போது இனந்தெரியாத சிலர் சுதுமலை சந்தியில் வைத்து வழிமறித்தவர்கள் வாள் வெட்டுக்களையும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாறியாக தாக்கியுள்ளனர.
எதிர்பாராத விதமாக திடீரென தாம் தாக்குதலுக்கு உள்ளவதை உணர்ந்த மாணவர்கள் ஓடத்தொடங்கியிருக்கின்றார்கள் அந்த நேரத்தில் துரத்திவந்த சிலர் ஒரு மாணவனுக்கு வெட்டியதில் கை இரண்டானது வெட்டப்பட்ட கை நிலத்தில் துடித்துக்கொண்டு கிடந்திருக்கின்றது.
மற்றைய ஒரு மாணவனுக்கு உடல் முழுவதும் வாளால் வெட்டியிருக்கின்றனர். இறுதியில் தாக்குதல்காரர்களின் வாள் வெட்டுக்கள் ஓய, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவனின் தலைக்கவசத்தை கழட்டுமாறு கூறியிருக்கின்றனர்.
அப்போது அவன் கழட்டி காட்டும்போது அவர்கள் தாங்கள் தாக்க வந்தவர்கள் இவர்கள் இல்லை என்பதை உணர்ந்து திரும்பிச்சென்றிருக்கின்றார்கள்.
இதன் பின்னர் படுகாயமடைந்த மூன்று மாணவர்களையும் துண்டான கையையும் எடுத்துக்கொண்டு மானிப்பாய் வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார்கள் மாணவர்கள்.
எனினும் அங்கிருந்து மேலதிக சிகிக்கைச்சாக யாழ்.போதானா வைத்தியாசலைக்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் கைத்துண்டாடப்பட்ட மாணவனை மேலதிக சிகிசிசைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை துண்டாடப்பட்ட கைது பொருந்துமா? பொருந்தாதா? என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.அங்கிருந்து கிடைக்கும் தகவலின் படி மூன்று நாட்களின் பின்னர்தான் முடிவு தெரியும்.
அதேவேளை யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மாணவர்களில் ஒருவருக்கு உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள், எழும்ப முடியாத நிலையிலேயே அம்மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதுவரை குறித்த அந்த மாணவர்களுடைய பெற்றோர் வந்து சேரவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களில் இருவர் வவுனியா மாவட்டமும் மற்றுமொரு மாணவர் முல்லைத்தீவு மாவட்டம், எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை இதுவரைக்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாருமே பாதிக்கப்பட்ட மாணவர்களை வந்து பார்வையிடவில்லை என கூட இருக்கும் சகமாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒருவன் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் தூர இடங்களில் இருந்து வந்து இங்கே கல்வி கற்கின்றோம். இங்கே எங்களுக்கு எத்தனையோ துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்தக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் இப்படியான சம்பவங்கள் மேலும் எங்களை பாதிப்பிற்குள்ளாக்குகின்றன எனத் தெரிவித்தார்.
இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இதைக்கண்டித்து நாளை மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment