இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் விளையாட மாட்டார்கள். அவர்கள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடருவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னையில் நடந்த போட்டிகளில் சிங்கள வீரர்கள் இடம் பெற தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் யாரும் சென்னையில் நடந்த போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டும் இந்தத் தடை தொடருவதாக தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் தெரிவி்த்துள்ளது. இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறுகையில், இந்த ஆண்டும் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட முடியாது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்குத் தெரிவித்து விட்டோம் என்றார். தற்போது இலங்கை வீரர்கள் ஏஞ்செலா மேத்யூஸ், திசேரா பெரைரா, லசித் மலிங்கா ஆகியோர் ஐபிஎல்லில் இணைந்து ஆடி வருகின்றனர். இவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். மேத்யூஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மேத்யூஸ் இடம் பெற மாட்டார்.
Social Buttons