ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவரான உதயங்க வீரதுங்க, யுக்ரேனின் கரில்லா அமைப்பிற்கு ஆயுதங்கள் விநியோகித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
தேவையேற்படின், அந்த விசாரணைகளுக்காக சர்வதேச காவற்துறையினர் ஒத்துழைப்பை பெற்று கொள்ளவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க, யுக்ரேனின் கரில்லா அமைப்பிற்கு ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய, விசாரணைகள் இடம் பெறுவதாக வெளிவிவகார பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தலைமறைவாகியுள்ள ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் மொழி பெயர்பாளராக கடமையாற்றிய நொயல் ரணவீர என்பவர் ரஷ்யாவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Social Buttons