அடுத்த சூப்பர்ஸ்டார் யார், என பல மாதங்களாக அஜித்-விஜய் ரசிகர்களிடையே கடும் போர் (வாய் வார்த்தையில் மட்டும்) நடந்து வருவது ஊர் அறிந்த விஷயம்.
பல்வேறு திரைபிரபலங்கள் இதை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறிவந்தாலும், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் கூறியது ரசிகர்களிடையே மீண்டும் ஒரு பெரிய சண்டை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய் பற்றி அவர் கூறியதாவது "விஜய் சார்.. நல்ல ஒரு நண்பர்.. ரொம்ப அடக்கமான மனிதர். அன்பாகவும் கனிவாகவும் பழககூடியவர். ரொம்ப ஃப்ரென்ட்லீயா பழக கூடியவர். தோள் மேல கை போடுவாரு, அவர் தோள் மேல கை போட விடுவார். அந்த அளவுக்கு நட்பா பழக கூடிய ஒரு சிறந்த மனிதர்.""ஒரு பெரிய ரசிகர் பட்டாளம், தனக்குனு ஒரு பாணி, தனக்குனு ஒரு சுப்பர்ஸ்டார்டம் இருக்க கூடிய ஒரு நடிகர்.
அவர் என்னோட நண்பர் என சொல்வதில் எனக்கு மிக பெரிய பெருமை."
Social Buttons