மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஸ்ரீலசுக இளைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அணி திரட்டி நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருவது குறித்து சு.க உயர் மட்டம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் சுதந்திரக் கட்சி உறுப்பினரே என தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தன்னையே கட்சியின் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் எனும் அழுத்தத்தை வெளியில் இருந்து பிரயோகித்து வரும் அதேவேளை அவருக்கு ஐமசுமு எந்தத் தடையையும் விதிக்கவில்லையென சு.க உயர் மட்டம் கூறி வருகிறது.
இந்நிலையில் கட்சியைப் பிளவு படுத்தும் வகையில் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி அண்மையில் மத்திய குழு உறுப்பினர்கள் ஐவர் நீக்கப்பட்டிருந்தமையும் தனக்கெதிரான விசாரணைகளை முடக்கித் தாமதப்படுத்தவே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு அரசியல் நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment