Latest News

April 14, 2015

மதியரசனின் இறுதிக்கிரியைகள் இன்று!கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் அஞ்சலி!!
by admin - 0

தமிழ்த் தேசியப்பற்றாளரான ஆழ்வாப்பிள்ளை மதியரசனின் இறுதிக்கிரியைகள் நேற்றுஅவரது வடமராட்சி நவிண்டிலில் உள்ள அவரது வாசஸ்தலத்தினில் இடம்பெற்றது. மதியரசன் அவர்களது இறுதி கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக தடுப்பு வைக்கப்பட்டுள்ள அவரது மகன் சுலக்சன் அனுரதபுரம் சிறைச்சாலையிலிருந்து அவரது இல்லத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டிருந்தார்.

தேசப்பற்றாளர் மதியரசன் அவர்களது இறுதி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஆனந்தராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சிவயோகன், வல்வெட்டித்துறை நகரசபைத் முன்னாளர் உறுப்பினர் சதீஸ் உள்ளிட்ட பெருமளவு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மதியரசன் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தியிருந்தார்.
.


« PREV
NEXT »

No comments