இறுதி யுத்தத்தில் இரு கைகளை இழந்தவருக்கு வாழ்வாதார உதவியையும் அத்தோடு
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் தனது ஓராண்டு நிறைவையொட்டி
வழங்கியது WTRRC.
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது (World Tamil's Rehabilitation Rights Comission - WTRRC) மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தினை தொலைத்து நிற்கின்ற தமிழ் உறவுகளுக்கு பல உதவிகள் நேரடியாகவும்... வெளிப்படையாகவும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் WTRRC தனது ஓராண்டு நிறைவையொட்டி, ஏற்கனவே செய்து வருகின்ற மாதந்த பயனாளிகளின் உதவிகள் அடிப்படையிலும், ஆணையத்தின் ஓராண்டு நிறைவுறுவதிலும் தனது உதவிகளை இரட்டிப்பாக செய்துள்ளது.
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் ஓராண்டு நிறைவு தினமான 01.04.2015 அன்று ஆணையத்தின் கல்வி நலத்திட்டப் பிரிவான "அரும்புகள்" ஊடாக முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பிரதேசம், தங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபத்தியார் முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி பெருமகிழ்வு கொண்டதுடன்...
ஆணையத்தின் மக்கள் வாழ்வாதாரப் பிரிவான "வளர்பிறை" ஊடாக மாதாந்த உதவிப் பயனாளிகள் அடிப்படையில் ஈழத்தில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் தனது இரு கைகளையும் இழந்து, உடல் முழுவதும் பலத்த பெரும் காயங்களையும் சுமந்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது வாழ்வாதாரத்தை நகர்த்த முடியாமல் மிகவும் துயரமான சூழ்நிலையில் காலங்களை நகர்த்தி வந்த முன்னாள் போராளி திரு. லோகேஸ்வரன் கேதீஸ்வரன் என்பவருக்கு நேற்றைய முன்தினமான 12.04.2015 அன்று வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்கள் ஊடாக வாழ்வாதார உதவியாக ஒரு இலட்சம் ரூபாக்காளையும் வழங்கி பெருமகிழ்வடைந்து கொண்டது.
உதவிகளைப் பெற்றுக் கொண்ட திரு. லோகேஸ்வரன் கேதீஸ்வரனும், அவரது குடும்பத்தினரும் உதவிகளை வழங்கிய ஆணையத்திற்கும்... ஆணைய உறவுகளுக்கும் தமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அத்தோடு, ஆணையத்தின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நேரடியாகச் சென்று புனித செபத்தியார் முன்பள்ளி மாணவர்களிடம் கற்றல் உபகரணங்களையும் மற்றும் திரு. கேதீஸ்வரன் என்பவருக்கு உதவிகளையும் வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் தனது நன்றிகளையும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் தெரிவித்துக் கொள்கிறது.
"அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"

No comments
Post a Comment