இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின.
No comments
Post a Comment