Latest News

April 09, 2015

மைத்திரி அரசு நெருக்கடியில் எந்நேரமும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
by admin - 0

chandrikka
மைத்திரி அரசு நெருக்கடியில் எந்நேரமும் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய நிலைமை கொழும்பு தகவல்கள் விவசாயி இணையத்த்துக்கு கிடைக்கபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற 400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு கடன் பெறுவது தொடர்பான உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் மீதான தீர்மானத்தை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை நேற்று 21 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த சட்ட மூலத்துக்கு  ஆதரவு தருவதாக தெரிவித்த எதிர்கட்சியினர் இறுதி நேரத்தில் அதரவு வழங்கவில்லை இதனால் அந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுகந்திரகட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் மகிந்தவின் ஆதிக்கம் போன்றன அரசாங்கத்தை கொண்டு செல்வதில் பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்கும் ரணில்,சந்திரிக்கா  மற்றும் மைத்திரி போன்றவர்கள் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 
« PREV
NEXT »