தமிழ் மீனவர்களின் உயிர்களில் பகிடி விடும் ஸ்ரீலங்கா அரசு ,இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது வெறுமனே பகிடி தான். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
டுபாயில் நடந்த பூகோள கல்வி மற்றும் திறன் அரங்கத்தில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுடன் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் இலங்கை வந்த போது விசா, சுங்கம், இளைஞர் அபிவிருத்தி தொடர்பில் கையெப்பமிட்ட ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்குமிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் எனக் கூறினார்.
அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை சுட்டுத்தள்ளும் உரிமை உள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது.
எனினும் அவற்றைச் சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். மேலும் மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது பற்றியும் அம்மையாரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட முறைகளை பயன்படுத்துவதே பிரச்சினைகள் இழுபடக் காரணம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இரு தடவை இலங்கைக்கு எதிராக வாக்களித்ததையிட்டும் கேட்கப்பட்டது.
முன்னைய அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் விட்டுக்கொடுக்காத இறுக்கமான போக்கை கொண்டிருந்தமையால் இந்த நிலைமை ஏற்பட்டதெனவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் மென்போக்கை வெளிப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை, சீனாவுடன் மிக மிக நெருக்கமாக இருப்பதையிட்டு இந்தியா விசனம் கொண்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இதை எவ்வாறு கையாளும் என கேட்கப்பட்ட போது புதிய அரசாங்கம் இரண்டு கட்சிகளின் கூட்டாலானது.
இந்த அரசாங்கம் அணிசேர கொள்கையை கடைப்பிடிக்கின்றது. இது சகல அயல் நாடுகளுடனும் நல்லுறவை வளர்க்கும். நாம் எந்தவொரு நாட்டையும் அது எவ்வளவு நட்பு நாடாக இருப்பினும் அது எமது நாட்டை சுரண்ட அனுமதிக்க மாட்டோம்.
இந்தியா தொடர்பில் இலங்கை மக்களுக்கு மதிப்பும் அன்பும் பயமும் கலந்த உணர்வு உள்ளது. இந்திரா காந்தி இலங்கை தொடர்பில் தவறாக நடந்துவிட்டார். அவருக்கு பின் வந்த இந்திய தலைவர்கள் இரு நாட்டு உறவுகளை சரி செய்ய முயன்று வருகின்றனர் எனவும் சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments
Post a Comment