முல்லைத்தீவு தண்ணீரூற்று கிழக்குப் பகுதியில் மின்னழுத்தியினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய ஆனந்தன் கவிராஜ் என்பவரே இந்த தாக்குதலில் உயிரிழந்தவராவார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இளைஞனுக்கும் அவரது 18 வயதான இளைய சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இளைய சகோதரன் மின்னழுத்தியால் குறித்த இளைஞனைத் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது இளைஞனின் உடல் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment
என்ன கொடுமை ...
Post a Comment