Latest News

April 13, 2015

விரைவில் இலங்கை வருவார் ஒபாமா
by admin - 0

vivasaayi
ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு ஒபாமாவின் விஜயம் குறித்து அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு எதிர்வரும் மே மாத முதற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரியவருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் தேர்தலின் பின்னர் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜனநாயகம் ஆகியவையே ஒபாமாவின் இலங்கை விஜயத்திற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லாட்சி மற்றும் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்கள் உள்ளிட்டவையும் அமெரிக்க பிரமுகர்களின் இலங்கை பயணத்தை வெகுவாக ஊக்குவித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments