தற்போதைய பாராளுமன்றை மே மாதம் 5ம் திகதி கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு பொதுத் தேர்தலை ஜூன் 27ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
100 நாள் திட்டத்தின் பின் பாராளுமன்றை கலைப்பதாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் 100 நாள் வேலைத் திட்டத்தை மேலும் சில நாட்கள் நீடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசியல் யாப்புத் திருத்தம் மற்றும் தேர்தல் முறை திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் தற்போதைய அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவது குறித்து கட்சிகள் இடையே மாறுபட்ட கருத்தக்கள் காணப்படுகின்றன.
எனினும் 19வது திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் மே 5ம் திகதி பாராளுமன்றை கலைத்து தேர்தலுக்குச் செல்வது உறுதி என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment