அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, மே மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகைதந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரது விஜயம் மே மாதம் 2ஆம் திகதி அமையவிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment