Latest News

April 19, 2015

எங்கள் நிலங்களை இராணுவம் கைப்பற்றிவிட்டது; வாழமுடியாத நிலையில் தமிழகம் திரும்பினோம்
by Unknown - 0

இராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய அகதிகளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது

நேற்று முன்தினம் நள்ளிரவில் இராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல் பகுதியில் திரிகோணமலைப்பகுதியைச் சேர்நத சத்தியசீலன வயது (50) அவரது மனைவி பரமேஸ்வரி வயது ( 41) மகள்களான மேரி வயது (18) அஞ்சலிதேவி வயது (15) விடுதலைசெல்வி வயது (13) ஆகியோரே இவ்வாறு வந்தடைந்தவர்களாவார்.

இவர்கள் மன்னார் மாவட்டம் பேச்சாலைப் பகுதியல் இருந்து இலங்கை பணம் ரூபா 50 ஆயிரம் கொடுத்து படகில்வந்து இறங்கியுள்ளனர். இவர்களை அப்பகுதி மீனவர்கள் தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர் இதனையடுத்து போலிஸார்  வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்

விசாரணையில் இவர்கள் இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1999இல் அகதிகளாய் தமிழக வந்ததாகவும் தாம்   திருவண்ணாமலை அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டிருந்த போது கடந்த 2010இல் சத்தியசீலனுடைய தாயர் இலங்கையில் மரணம் அடைந்ததால் தாயின் இறுதிசடங்கிற்காக விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு இவர்களின் நிலங்களை இராணுவம் எடுத்துக் கொன்டாதாலும் பிழைப்பு இன்றி குடும்பத்தாரோடு அவதியுற்று வந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லும் நோக்கத்தில் வந்தாதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று இரவு இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அகதிகளை விசாரணை செய்த நீதிபதி சரவணக்குமார் சத்தியசீலனை கடவுச்சீட்டு இன்றி இந்தியவிற்கு சட்டவிரேதமாக நுழைந்த வழக்கில் வரும் 30ஆம் தேதி வரை சென்னை புழல்சிறையில் அடைக்க உத்தரவு இட்டுள்ளார்.

மேலும் மனைவி பரமேஷ்வரி மற்றும் மூத்தமகள் மேரி ஆகியோரை 15 நாட்கள்  ஜாமினில் விடுதலை செய்ததோடு இரண்டு பெண் குழந்தைகளை பராமிக்கும் நோக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அகதிகள் முகாமில்  தங்கியுள்ள அவர்களின் உறவினர்களுடனான தங்கவைக்க போலிஸாருக்கு உத்தரவு இட்டதையடுத்து 4 பேரையும் போலீஸார் உறவினர்களிடம் கையளித்துள்ளனர். 
« PREV
NEXT »

No comments