Latest News

March 13, 2015

காலிறுதியில் மேத்யூஸ், ஹேராத் களமிறங்குவார்களா ?
by Unknown - 0

உலகக்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் இலங்கை அணி, வீரர்களின் காயத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

உலகக்கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. `ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 8 புள்ளிகளுடன், நியூசிலாந்துக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் காயமடைந்தார். இருப்பினும் அவர் காலிறுதிப் போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது காயம் குறித்து ஸ்கென் செய்து பார்த்ததில் பெரிய பிரச்சனை ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காயம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடாத முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் 80 சதவீதம் காலிறுதியில் விளையாட வாய்ப்பிருப்பதாக தொடக்க ஆட்டக்காரர் திரிமான்னே தெரிவித்துள்ளார்.

வருகின்ற 18ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது
« PREV
NEXT »