இங்கிலாந்து அணி விளையாடும் விதம் அந்த நாட்டு ரசிகர்களையும், ஊடகங்களையும் ரொம்பவே கடுப்பாக்கி விட்டது போலும். சகட்டு மேனிக்கு இங்கிலாந்து அணியை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டுள்ளனர்.
உலகக் கோப்பையில் நான்கு போட்டிகளில் மோதியுள்ள இங்கிலாந்து அணி அதில் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் நியூசிலாந்து மற்றும் இலங்கையிடம் அது பெற்ற தோல்வி ரொம்பவே கேவலமானது.
இதுதான் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது. இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், இலங்கை அணியை முடக்க முடியாமல் தடுமாறியது ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கி விட்டது.
நீங்க எடுத்த ரன்களை வைத்துக் கூட உங்களைக் காப்பாத்திக்க முடியாமல் போயிருச்சே என்று இங்கிலாந்து அணிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து கொண்டுள்ளன. வெல்லிங்டனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக பேட் செய்திருந்தது. ஆனால் பவுலர்கள் கவிழ்த்து விட்டு விட்டனர். இதனால் மிகப் பெரிய ஸ்கோரை இலங்கை அழகாக சேஸ் செய்து வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
Social Buttons