Latest News

March 02, 2015

சிங்கள மொழியிலும் போர்குற்ற ஆவணப்படம்-கெலம் மெக்ரே
by admin - 0

சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் இது வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த தமது ஆவணப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.

ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவை சென்றடையவில்லை.

இந்த நிலையில் அடுத்து வெளியாகவுள்ள ஆவணப்படும், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைச் சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு, சிங்கள மக்களின் ஒத்துழைப்பும், புரிதலும் முக்கியமானதாகும்.

மகிந்த அரசாங்கத்தின் ஊழல்களை அறிந்து கொண்ட சிங்கள மக்களை அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார்கள்.

அதேபோன்று இறுதி யுத்தத்தில் உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் இடம்பெற்றன? என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொண்டால், அவர்களும் தமிழர்களுக்கு ஆதரவான சக்தியாக மாறுவார்கள்.

எனவே தாம் தயாரித்துள்ள அடுத்த ஆவணப்படம் சிங்கள மொழியிலும் உருவாக்கப்படுவதாகவும், அத்துடன் சிங்களவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்படுவதாகவும் கெலம் மெக்கரே தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments