துனிஷியா நாடாளுமன்றதிற்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகள் 8 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துனிஷியா நாட்டின் தலைநகரான துனிஷில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் இன்று(புதன்கிழமை) உள்ளூர் நேரடிப்படி மாலை 4.30 மணியளவில் ராணுவ உடையில் 3 தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்றம் வழியாக சென்ற தீவிரவாதிகள், அங்குள்ள பார்டோ(Bardo) அருங்காட்சியகத்தில் இருந்த பல சுற்றுலா பயணிகளை பிணையக்கைதியாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, தீவிரவாதிகள் 8 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இறந்து போன சுற்றுலா பயணிகளில் இருவர் பிரித்தானியாவை சேர்ந்தவர் என்றும், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளை சேர்ந்த 30 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலை அங்குள்ள உள்ளூர் ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 17 பேர் அடங்கலாக மொத்தமாக 19 பேர் பலியானார்கள் என்று அந்நாட்டு பிரதமர் ஹபீப் எஸ்ஸித் தெரிவித்தர்.
பலியானவர்களில் இத்தாலி, ஸ்பெயின், போலந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்கும். ரியூனிசியப் பிரஜையொருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்ததாக பிரதமர் கூறினார்.
பாதுகாப்புப் படைவீரர்கள் இரு ஆயதபாணிகளை சுட்டுக் கொன்றுள்ளார்கள். அவர்களின் சகாக்களை படையினர் தேடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Social Buttons