Latest News

March 26, 2015

நாளை உலகின் ஒருபகுதி அழியுமா? பரபரப்புடன் உலகம்
by admin - 0

சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை (27–ந்தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது.
world end
அந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.
இந்த ராட்சத கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் ‘கேட்டலினா ஸ்கை சர்வே’ மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாகும்.
இந்த ராட்சத விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வருகிறது. இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
1908–ம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பாதிப்புகளை விட இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக பக்கிங்காம் ஷைர் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் பில் நேப்பியர் கூறுகையில், ‘‘2014 ஒய்.பி.35’’ போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும் அவை ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது’’ என்றார்.

« PREV
NEXT »