Latest News

March 26, 2015

சுதந்திரக் கட்சியில் மஹிந்த அலை !
by Unknown - 0


ரத்தினபுரியில் மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க உள்ளிட்ட சில அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 28 சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி., உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி, தினேஸ் குணவர்தனவின் தலைமையிலான மஹஜன ஐக்கிய முன்னணி கட்சி ஆகியன இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இந்தக் கூட்டத்தில் மேல் மாகாணசபையின் முதல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வேறும் கட்சிகள் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு பங்கேற்றால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தது.

நேற்றைய தினமும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா இது பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான ஓர் பின்னணியில் நுகோகொடை, கண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டத்தை விடவும் பெரும் எண்ணிக்கையிலான சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »