Latest News

March 23, 2015

உலகக் கிண்ண இறுதிக்கு முதல் முறை முன்னேற நியூசிலாந்து - தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை!
by Unknown - 0


உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து தென்னாபிரிக்க அணிகள் இன்று களமிறங் குகின்றன. இரு அணிகளும் இதுவரை உல கக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையா டாத நிலையில் அந்த எதிர்பார்ப்பை உறு திசெய்ய இன்று போராடவுள்ளன.

ஒக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி நியூசிலாந்து நேரப்படி பகலிரவு ஆட்டமாகும். நேராக இரு குறுகிய பௌண்டரி எல்லை களைக் கொண்ட ஒக்லாந்து மைதானம் தனித்துவமானதாகும்.

இங்குள்ள ஆடுகளம் பற்றி நியூசிலாந்து அணிக்கு அதிக அனுபவம் உள்ளது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் அந்த அணிக்கு நன்றாக தெரிந்தி ருக்கிறது.

இதனைக் கொண்டு எதிர்த்து ஆடும் தென் னாபிரிக்க அணி அபாயம் அற்றது என்று குறிப் பிட முடியாது, ஆனால் ஒக்லாந்து அரங்கில் தென்னாபிரிக்க அணி கடைசியாக விளை யாடிய போட்டியில் அது பாகிஸ்தானிடம் தோல் வியை சந்தித்திருந்தது.

சிறிய மைதானத்தில் தென்னாபிரிக்கா விளை யாடும்போது அது முகம் கொடுக்கும் முக் கிய பிரச்சினையாக வலுவான ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாததை குறிப்பிட லாம். ஐந்தாவது பந்துவீச்சாளராக செயற் பட்ட டுமினி, இலங்கைக்கு எதிரான காலிறுதியில் ஹட்ரிக் விக்கெட் எடுத்தபோதும் அவரால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சோபிக்க முடியுமா என்பது சந்தேகமே.

எனவே தென்னாபிரிக்கா போட்டியில் தனது ஆதிக்கத்தை தக்கவைத் துக் கொள்ளவேண்டுமானால் அது ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நியூசிலாந்தின் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டி இருக்கும். அதனை செய்வதற்கு டெல் ஸ்டைன், மோர்னி மோர்கல் மற்றும் கைல் அப்போட் போன்ற சிறந்த வேகப்பந்து வரிசை தென்னாபிரிக்கா வசம் உள்ளது.

குறிப்பாக ஆரம்ப ஓவர்களிலேயே இந்த வேகப்பந்து வீச்சாளர்களில் யாராவது நியூசிலாந்து அணித் தலைவர் பிரன்டன் மக்கலமின் விக்கெட்டை வீழ்த்த முடியுமாக இருந்தால் தென்னாபிரிக்காவுக்கு சாதக மாக இருக்கும். மக்கலமை பொருத் தவரை இம்முறை உலகக் கிண்ணத்தில் பந்தை அனைத்து முனைகளிலும் விளாசி ஓட்டங்களை குவித்தபோதும் பொறுப்பான துடுப்பாட்ட வீரருக்கான ஆட்டத்தை அவரி டம் பெரிதாக காணக்கிடைக்கவில்லை. நியூசிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமானால் மக்கலம் ஆட்டத்தில் நிதானம் காட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

இந்த நிலையில் மக்கலம் தென்னாபிரிக் காவின் வலுவான ஆரம்ப பந்துவீச்சாளர் களுக்கு அதிரடியாக ஆட முயல்வாரா அல்லது தென்னாபிரிக்காவின் பலவீனமான ஐந்தாவது பந்து வீச்சாளர் வரும் வரை காத்திருப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து உலகக் கிண்ணத்தில் இது வரை விளையாடிய ஒன்பது போட்டிகளிலும் வெற்றியீட்டியது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிக்காக வெவ்வேறு வீரர்கள் சோபித் தார்கள். பிரென்டன் மக்கலம், கொரி அன்டர் சன், டிம் சௌதி, கேன் வில்லியம்ஸன், டானியல் விட்டோரி கடைசியில் மார்டின் கப்டில் என்று சோபித்துவரும் வீரர்களின் வரிசை நீண்டுள்ளது.

மறுபக்கம் தென்னாபிரிக்க அணி தனது லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து சுமாரான அணியாகவே நொக்அவுட் சுற்றுக்கு தெரிவானது. என்றாலும் அது காலி றுதியில் இலங்கையை மிக இலகுவாக வீழ்த்தி முதல் முறை உலகக் கிண்ண நொக் ஆவுட் ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

தென்னாபிரிக்காவை பொருத்தவரை அதனது துடுப்பாட்ட ஆயுதமாக அணித்தவைர் ஏ.பி. டிவிலியர்ஸ் செயற்பட்டு வருகிறார். என்றாலும் டிவிலியர்ஸ் இன்றைய போட்டியில் நியூசிலாந்தின் பலம்மிக்க வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சௌதியை சமாளிக்க வேண்டியுள்ளார். இந்த இரு வேகப்பந்து வீச்சாளர்களும் இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றனர். இதில் நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் டானியல் விட்டோரியை யும் குறைத்து மதிப்பிட முடியாது.

மார்டின் கப்டில் காலிறு தியில் மேற்கிந்திய அணியை திக்குமுக்காடச் செய்து 237 ஓட்டங்களை குவித்திருந் தார். எனவே அரையிறுதியில் அவர் மீதான நம்பிக்கை அணியிலும் ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது. என்றா லும் கப்டில் தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளில் இதுவரை பெரிதாக சோபித்ததில்லை. தென்னாபிரிக்காவுடன் இதுவரை 11 போட்டிக ளில் விளையாடி இருக்கும் கப்டிலின் ஓட்ட சராசரி வெறுமனே 11.50 ஆகும். இதன்போது அவர் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருப் பதோடு ஏழு தடவைகள் ஒற்றை இலக்கத் திற்கு வெளியேறி இருக்கிறார்.

உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு முத லில் ஒரு சராசரி அணியாக இருந்த நிய+ஸி லாந்து தற்போது மிக வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தை முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் தென்னாபிரிக்கா வழமையை விடவும் அதிக திறமையை காட்ட வேண்டி இருக்கும். அனைத்துத் துறைகளிலும் சோபிக்கும் நியூசிலாந்து இன்றும் தனது வழமையான ஆட்டத்தை தொடர்ந்தால் இலகுவாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.
« PREV
NEXT »