வெற்றி ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு சிவகார்த்திகேயன் நல்ல உதாரணம். சாதாரண தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார்.
கடந்த சில வாரங்களாக இவரின் காக்கிசட்டை படம் தான் வசூல் வேட்டை நடத்தி வந்தது. ஆனால், இந்த வாரம் சென்னை வசூல் நிலவரத்தில் மொட்டை ராஜேந்திரன் ஆதிக்கம் என்றால் நம்புவீர்களா? இது தான் உண்மை.
இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த இவனுக்கு தண்ணில கண்டம் படம் தான் இந்த வார சென்னை வசூலில் ரூ 32 லட்சம், (மொத்தம் ரூ. 48 லட்சம்) வசூலித்து முதலிடத்தில் உள்ளது. காக்கிசட்டை படம் இரண்டாவது இடத்தில் 30 லட்சம், (மொத்தம் ரூ 4.35 கோடி) வசூலித்துள்ளது.
Social Buttons