செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் மாநாட்டுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கை அடிப்படையில் சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருந்தது. எனினும் செப்டம்பர் மாதமும் அதனை பிற்போடுமாறு கோரப்படும் பட்சத்தில், தாம் அதற்கு இணங்கப் போவதில்லை.
இந்த அறிக்கை செப்டம்பர் மாத மாநாடு ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons