அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையின் நிமித்தம், அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையை வழங்கும் திட்டத்தை ஐக்கிய நாடுகள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசனம் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கு அவுஸ்திரேலியா மனித உரிமைகள் சட்ட மையம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மிகவும் மோசமான செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகளினது சட்டத்திட்டங்களையும், சர்வதேச சட்டங்களையும் அவுஸ்திரேலியா மீறி வருகிறது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசனம் வழங்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons