Latest News

March 22, 2015

புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
by Unknown - 0


இலங்கையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வழிசெய்யும் அரசியல் அமைப்பின் 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை கடந்தவாரம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதை மீறும் வகையில் கூடுதல் அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையேற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களில் 11 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள். அதாவது கேபினட் அமைச்சர்கள்.

எஞ்சியுள்ளவர்களின் ஐந்துபேர் ராஜாங்க அமைச்சர்களாவும், பத்துபேர் துணை அமைச்சர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த ஃபௌசி உட்பட பலர் கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர். சரத் அமனுகமுன, எஸ் பி திஸாநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன், ரெஜினால்ட் குரே போன்றவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் முந்தைய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த மஹிந்த சமரசிங்க, ஜீவின் குமாரணதுங்க ஆகியோருக்கு இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற ஜெயராஜ் ஃபெர்ணாண்டோபுள்ளேயின் மனைவி சுதர்சனிக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஃபௌசிக்கு பேரிடர் நிவாரண அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. பீலீக்ஸ் பெரேரா அரசின் சிறப்புத் திட்டங்களுக்கு பெறுப்பேற்றுள்ளார். தொழில்துறை எஸ் பி நாவின்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னர் நிதித்துறைக்கான துணை அமைச்சராக இருந்த சரத் அமுனகம இப்போது உயர்கல்வி அமைச்சராகியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுந்தந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா போன்றோர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.

ஆனாலும் நிமால் சிறிபால டி சில்வா தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக செயல்படுவார் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றே நடைமுறையில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்கள்

ஏ.எச.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க - கிராமிய விவகார அமைச்சர்
ஜனக பண்டார தென்னக்கோன் - உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்
பிலிக்ஸ் பெரேரா – விசேட திட்டமிடல் அமைச்சர்
மகிந்த யாப்பா அபேகுணவர்தன – பாராளுமன்ற விவகார அமைச்சர்
ரெஜினோல்ட் குரே – விமான சேவை அமைச்சர்
விஜித் விஜயமுனி சொய்சா - நீர்ப்பாசன அமைச்சர்
மகிந்த அமரவீர – மீன்பிடிதுறை அமைச்சர்
சரத் அமுனுகம - உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
பியசேன கமகே - தொழிற் பயிற்சி திறன் விருத்தி அமைச்சர்

பிரதியமைச்சர்கள்

திஸ்ஸ கரலியத்த- புத்தசாசனம் பிரதியமைச்சர்
தயாசிரித்த திசேரா - மீன்பிடி பிரதியமைச்சர்
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - உள்நாட்டு பிரதியமைச்சர்
லச்மன் செனவிரட்ன- இடர்முகாமைத்துவ பிரதியமைச்சர்
லக்ஷ்மன் யாப்பா - விமான பிரதியமைச்சர்
லலித் திஸாநாயக்க- நீர்ப்பாசனம் பிரதியமைச்சர்
ஜெகத் புஸ்பகுமார - பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர்
லசந்த அழகியவன்ன - கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர்
சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே- உயர்கல்வி பிரதியமைச்சர்
சாந்த பண்டார - ஊடகம் பிரதியமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

பவித்ரா வன்னியாராச்சி- சுற்றுச்சூழல்
ஜீவன் குமாரதுங்க- தொழிலாளர் விவகார
மஹிந்த சமரசிங்க-நிதி
சீ.பீ. ரத்நாயக்க- அரச நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டு
டிலான் பெரேரா- வீடு மற்றும் சமூர்த்தி விவகாரம்


« PREV
NEXT »