சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. அவருக்கு வயது 91.
ஒரு காலத்தில் சின்னஞ்சிறு கடற்கரை நகரமாக பார்க்கப்பட்ட சிங்கப்பூரை, உலகின் முக்கிய செல்வந்த மையமாக மாற்றிக்காட்டியவர் லீ என்று புகழப்படுகிறார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ 31 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
சிங்கப்பூர் பொதுமருத்துவ மனையில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணிக்கு அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக சிங்கப்பூர் பிதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
Social Buttons