இலங்கை மீதான யுத்தக்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியாகிய பின்னரே உள்நாட்டில் அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பான உள்நாட்டு பொறிமுறைகள் உருவாக்கப்படும்.
செப்டம்பர் மாதம் சர்வதேச யுத்தக்குற்ற அறிக்கை வெளியாக்கப்படும் போது, அதில் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றவர்களுக்கு எதிராக உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ஷவினர் மேற்கொண்ட ஊழல்கள் குறித்த பூரண விசாரணைகளுக்கு மாத்திரமே சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons