அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று சுமார் 5 மணியளவில் மெல்பேர்ன் தடுப்புக் காவலில் இருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அதை தடுத்து நிறுத்தும் முகமாக மெல்பேர்ன் தமிழ் அகதி அமைப்பினரும் அகதி ஆர்வலர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போதும் அவர் எங்குள்ளார் என்பது தெரியாத நிலை இருந்ததாக அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று காலை அவர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் விமானத்திற்குள் துண்டுப்பிரசுரங்கள் பகிரப்பட்டதன் காரணமாக 2 பிரயாணிகள் விமானத்திற்குள் ஏற்படுத்திய அசம்பாவித சூழ்நிலை காரணமாக பொலிசாரை அழைத்து மீண்டும் அவரை இலங்கைக்கு பலவந்தமாக அழைத்து செல்லாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கை மிகவும் சிரமமான சூழ்நிலையிலும் பாரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளது என மெல்பேர்ன் அகதி செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை தமிழர்களை மட்டும் நாடு கடத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Social Buttons