Latest News

March 14, 2015

மைத்திரி அரசிலும் தமிழ்மக்களுக்கு சந்தேகம் : சுப்பிரமணியம்
by admin - 0

 மகிந்த அரசைப் போன்று மைத்திரி அரசிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு எட்டப்படவில்லை ஆகவே மகிந்த அரசைப் போலவே மைத்திரி அரசிலும் சந்தேகம் தான் எழுவதாக வடமாகாண கடற்தொழிலாளர் இயக்கத்தின் செயலர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.    

 இன்று பிரதமர் நநரந்திர மோடி யாழ்.வருகை வரும் சமயம் யாழில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,   மகிந்த அரசின் சர்வாதீகார ஆட்சிக்குள் சிக்குண்டு இருந்த நாங்கள் அதைவிட்டு வெளியில் வர வேண்டும் என்ற தமிழ் மக்களது அபிலாசைகளால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  பல இலட்ச வாக்குகளை தாரைவார்த்து  கொடுத்து தமிழ் மக்களாகிய நாங்கள் ஜனாதிபதியாக்கியுள்ளோம்.   

எனினும் மைத்திரி அரசால் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.விசாரணைகள் பிற்போடப்படுகின்றது.எனவே தான் முன்னைய அரசு போலவே இந்த அரசிலும் சந்தேகம் தான் எழுகின்றது.     எனவே தான் இன்றைய தினம் யாழ்.வருகை தரும் பிரதமர் மோடியால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலே நாம் இந்த மௌன ஊர்வலத்தை நடாத்தியிருந்தோம்.

எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்க உடன் தீர்வ பெற்றுத்தருமாறும் இந்திய அரசாங்கத்தின் பிரதமர் மோடியூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments