ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின்கடந்த ஒருவார காலமாக காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலமாக புட்டின் பொது இடங்களில் தோன்றி இருக்கவில்லை.
அத்துடன் அவர் கசகஸ்த்தானுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தையும் ரத்து செய்துள்ளதுடன், சில வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புகளும் ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மொஸ்கோவில் தற்போது பரவி வரும் ஒருவகையான நோயில் அவர் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், நரம்பு தளர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதேநேரம் க்ரிமிலினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலத்தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும் இது குறித்து ரஷ்யாவில் உத்தியோகபூர்வமாக யாரும் கருத்துக்களை வெளியிடவில்லை.
ஆனால் அவர் நலமாக இருப்பதாக மாத்திரம், ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Social Buttons