நடப்பு நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஏனைய அரசியல் கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தம் ஏற்படும் வரை காத்திருக்க முடியாது எனவும் முதலில் தேர்தலை நடத்தி விட்டு, அதன் பின்னர் தேர்தல் முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்ய முடியும் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
Social Buttons