யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் விற்பனை செய்யும் நிலையில் இருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் கஞ்சா யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறிப்பிட இடத்திற்குச் சென்று கஞ்சாவினைக் கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் மிருசுவில் கெற்பேலியைச் சேர்ந்தவர்கள் என்றும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்ப்படுத்தவுள்ளனர் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.
Social Buttons